Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

Covid Questions: தடுப்பூசியின் முதல் டோஸை ஓர் இடத்திலும் அடுத்த டோஸை மற்றும் ஓர் இடத்திலும் போடலாமா?

நான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை சென்னையில் போட்டுக் கொண்டேன். கல்லூரி திறக்கப்பட்டிருப்பதால், அடுத்த டோஸ் ஊசியை நான் படிக்கும் கோயம்புத்தூரில் போட்டுக் கொள்ள முடியுமா? வழிமுறைகள் என்னென்ன?

- ஏ. புகழ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``முதல் டோஸ் தடுப்பூசியை நீங்கள் சென்னையில் போட்டிருந்தாலும், இரண்டாவது டோஸை கோயம்புத்தூரில் தாராளமாகப் போட்டுக் கொள்ளலாம்.

கோவின் ஆப்புக்குள் சென்று பார்த்தால் உங்கள் தடுப்பூசி விவரங்களைப் பார்க்கலாம். உங்களுக்கு இரண்டாவது தவணை எப்போது செலுத்தப்பட வேண்டும் என்ற தகவலும் அதில் இருக்கும்.

COVID-19 vaccine

நீங்கள் முதல் டோஸ் போட்டுக்கொண்டதற்கான தகவல்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை வைத்து, கோயம்புத்தூரில் உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் பதிவு செய்துவிட்டு இரண்டாவது தவணையைப் போட்டுக் கொள்ளலாம். எனவே இந்த விஷயத்தில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை."

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-i-take-2-doses-of-covid-vaccines-at-different-places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக