Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

மும்பை: நட்சத்திர ஹோட்டலில் 8 மாத ஆடம்பர வாழ்க்கை; ரூ.25 லட்சம் பாக்கி! -ஜன்னல் வழியே தப்பிய நபர்

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 8 மாதங்கள் வாடகை எதுவும் கொடுக்காமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஒருவர் தப்பிசென்றிருக்கிறார். மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த முரளி காமத் என்பவர் தனது மகனுடன் நவிமும்பை கார்கர் பகுதியில் உள்ள `ஹோட்டல் த்ரீ ஸ்டார்’ என்ற ஹோட்டலுக்கு கடந்த நவம்பர் மாதம் வந்தார். தான் சினிமா துறையை சேர்ந்தவர் என்றும், தனக்கு இரண்டு ஆடம்பர அறைகள் தேவை என்றும் தெரிவித்தார்.

சித்தரிப்பு படம்

ஹோட்டலில் அறை பதிவு செய்யும் போது முன்பணம் கொடுக்காமல் தனது பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு ஒரு மாதத்தில் அட்வான்ஸ் பணம் கொடுப்பதாக தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர்களின் அவரின் பேச்சை நம்பி ஹோட்டலில் தங்க அனுமதித்தனர். ஒரு அறையை அலுவலகமாகவும், மற்றொரு அறையில் தங்கவும் பயன்படுத்தினார். சொன்னபடி அவர் ஒரு மாதத்தில் அட்வான்ஸ் பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வாடகையோ அல்லது அட்வான்ஸ் பணமும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

Also Read: ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது ரூ.41 லட்சம் மோசடி புகார் - டெல்லி தொழிலதிபர் கோர்ட்டில் முறையீடு!

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணத்தை கொடுக்கும்படி ஹோட்டல் நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில் கடந்த மாதம் திடீரென ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு தனது 12 வயது மகனை அழைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். அறை தொடர்ந்து அடைக்கப்பட்டு இருந்ததால் அதனை ஊழியர்கள் திறந்து பார்த்தபோதுதான் அவர்கள் இரண்டு பேரும் பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது. அறையில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை மட்டும் விட்டுச்சென்றிருந்தனர். ஹோட்டல் ஊழியர்களும் தங்களுக்கு தெரிந்த இடத்தில் தேடினர்.

மோசடி

முரளி ஹோட்டல் வாடகையாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவர் ஹோட்டலை விட்டு வெளியில் சென்றாலே ஊழியர்கள் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். எனவேதான் பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஹோட்டல் நிர்வாகம் மும்பை போலீஸில் புகார் செய்துள்ளது. போலீஸார் முரளி கொடுத்த பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/8-months-of-luxury-living-in-a-hotel-and-escaped-through-bathroom-window

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக