தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. டிக் டாக் செயலியில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலம் அடைந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரைப்போலவே டிக் டாக் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர் தஞ்சையைச் சேர்ந்த திவ்யா.
டிக் டாக் செயலிக்கு தடைவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திவ்யா யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். இவர் வெளியிடும் வீடியோக்களில் பலவும் ஆபாசமாக இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது
இந்த டிக் டாக் பிரியர்கள் இருவருக்குள்ளும் கடந்த 3 ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்தது. தாங்கள் வெளியிடும் வீடியோக்களில் ஒருவரை ஒருவர் வசைபாடி கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் காவல் நிலையம் வரை சென்று வழக்கு பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் 2020 டிசம்பரில் சுகந்தி, `சமூகவலைதளங்களில் திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
Also Read: சென்னை: `பெற்ற மகள் என்றுகூட பாராமல் அவதூறு பேசினார்!’ - டிக்டாக் பிரபலமும், அவரின் நண்பரும் கைது
அதனடிப்படையில் தேனி போலீஸார் விசாரணை நடத்தி திவ்யா ஆபாசமாக பேசியதை உறுதிசெய்தனர். மேலும் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து திவ்யாவைத் தேடி வந்தனர். இதையறிந்த திவ்யா தேனி போலீஸார் தன்னை தேடுவதாகக் கூறி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்விட்டு தலைமறைமானார்.
போலீஸார் தன்னுடைய செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து பின்தொடர்வதைத் தெரிந்து கொண்ட திவ்யா தஞ்சை, சென்னை, வடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நாகபட்டினத்தில் திவ்யாவைச் சுற்றி வளைத்தப் போலீஸார் அவரைக் கைது செய்து தேனி சைபர் க்ரைம் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு, மற்றும் ஐபிசி சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திவ்யாவை சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/tik-tok-divya-arrested-in-nagapattinam-by-police-team
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக