இந்தியில் பெரும் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் தேசிய விருதை வென்றது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் போட்டிப்போட ரீமேக் ரைட்ஸை வாங்கினார் தியாகராஜன். பிரசாந்த் ஹீரோ, யார் இயக்குநர் என்று நீண்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
முதலில் இயக்குநர் மோகன் ராஜா 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கை இயக்குவதாக இருந்தது. படத்தின் டிஸ்கஷன் நடந்து கொண்டிருந்த நிலையில் லாக்டெளன் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. இதற்கிடையே மோகன் ராஜா சிரஞ்சிவியோடு கூட்டணிப்போட, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் தற்போது இதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். வில்லி கேரக்டரில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு பிரசாந்தும் சிம்ரனும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கயிருக்கிறார்கள்.
Also Read: ஸ்டார் அல்ல நடிகன்..!
படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். படத்துக்காக பிரசாந்த் எப்படித் தயாராகிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள தியாகராஜனிடம் பேசினேன். "படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள்ல பிஸியா இருக்கோம். படத்துல, தன்னோட லுக் நல்லாயிருக்கணும்னு பிரசாந்த் பயங்கரமா வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கார். ஒரு நாளுக்கு மூணு ஜிம் ட்ரெய்னர்ஸ் இவருக்குப் பயிற்சி கொடுத்துட்டிருக்காங்க. படத்துல பிரசாந்த்தோட லுக் வேற மாதிரியிருக்கும். பியோனோவும் பிரசாந்த் கத்துக்கிட்டு இருக்கார். சீக்கிரமே படத்தோட ஷூட்டிங் தொடங்கிடுவோம்" என்றார் உற்சாகமாக!
source https://cinema.vikatan.com/tamil-cinema/producer-thiagarajan-about-andhadhun-tamil-remake
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக