மிகவும் பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Also Read: நாமக்கல்: கோயில் திருப்பணிக்குத் தோண்டிய குழி... உள்ளே கிடைத்த பழைமையான நந்தி சிலை!
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், பேருந்து நிலையத்தையொட்டி, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுக்க இந்த ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் உள்ளனர். இந்த கோயிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை உள்ளதால், ஆஞ்சநேயருக்கு பூஜைகள், அபிஷேகம் நடக்கும்போது, கோயிலுக்கு உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மாதம் தோறும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில், நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, ஆஞ்சநேயர் சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது.
பின்னர், பட்டாச்சாரியார்கள் ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருள்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
source https://www.vikatan.com/spiritual/news/namakkal-anjaneyar-temple-special-purattasi-month-poojai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக