Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

`மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்புக்கு நிரந்தர மையம்!' - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன், கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் காது கேட்காத, வாய் பேச முடியாத நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

Also Read: ஆட்சியில் இருந்தால்தான் கோவை மக்கள்மீது அக்கறையா மிஸ்டர் வேலுமணி?

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

பணிக்கு தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் சமீரன், “தன்னார்வ அமைப்புடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் சுமார் 50 பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிரந்தர மையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக நாங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

எங்களுக்கு இதில் வேலை கிடைத்திருப்பதன் மூலம் வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு நிந்தர வேலை வாய்ப்பு மையம் அமைக்கும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மனதார வரவேற்கிறோம். மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு நன்றி.” என்றனர் நெகிழ்ச்சியுடன்

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-district-collector-announcement-about-physically-challenged-persons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக