Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

7அடி உயர வாழைத்தார், 350 பழங்கள்; விற்பனை மண்டியில் விவசாயிகள் ஆச்சர்யம்!

கரூர் வாழைக்காய் கமிஷன் மண்டியில் 350 பழங்களை கொண்ட, 7 அடி உயரம் உள்ள வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டதை, வியாபாரிகளும், பொதுமக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த தார் ஒன்று ரூ.1,100-க்கு ஏலத்தில் விற்பனையானதால், அதை விளைவித்த விவசாயிகளை மகிழ்ச்சியடைந்தனர்.

7 அடி உயர வாழைத்தார்கள்

Also Read: `அறிவிப்புகள் செயல் வடிவமானால் விவசாயிகளுக்கு பொற்காலம்தான்!' - வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள்

கரூர் நகரில் உள்ள ரயில்நிலையம் அருகே உள்ள வாழைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் ஏலம் விடுவது வழக்கம். இந்த மண்டிக்கு கரூர், புகளூர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், நொய்யல், நாமக்கல், லாலாபாட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வருவது வழக்கம். கற்பூரவள்ளி, பூவன், ரஸ்தாலி, ஏழரசி, மொந்தன், பச்சைப்பழம் என்னும் பச்சலாடம்பழம் உள்ளிட்ட வாழை வகைகள் ஏலத்திற்கு வரும்.

இந்நிலையில், இங்கு ஏலம் விடப்படும் வாழைப்பழங்களை தார் கணக்கில் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், இதை கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் மற்றும் இடையாறு ஆகிய பகுதிகளில் காவிரிகரையோரம் விளைந்த கற்பூரவள்ளி வாழைத்தார்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு வந்தன. அந்த தார்கள் ஒவ்வொன்றும் 5 அடி முதல் 7 அடி உயரம் கொண்டவையாக இருந்ததால் அனைவரும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்துவந்தனர்.

7 அடி உயர வாழைத்தார்கள்

Also Read: ரசகதலி, மொந்தன், பேயன்; கன்னியாகுமரியில் இத்தனை வாழை ரகங்களா? #VisualStory

ஏலத்திற்கு வந்த வாழைத்தார்களுள் ஒரு தார் பூவன் ரக வாழை ரூ.650-க்கும், ரஸ்தாலி ரூ.550-க்கும், பச்சலாடம்பழம் என்கிற பச்சைப்பழம் ரூ.450-க்கும் விற்பனையானது. ஆனால் இதில் 7 அடி உயரம் வளர்ந்த கற்பூரவல்லி வாழைத்தாரில், 350-க்கும் மேற்பட்ட பழங்கள் இருந்தன. எனவே இந்த தார் அதிகப்பட்சமாக ரூ1,100-க்கு ஏலம் போனது. இப்படி, இரண்டு தார்கள் ரூ. 2,200-க்கு என விலை போனது. ``கரூர் மார்க்கெட் வரலாற்றிலேயே 7 அடி உயரம் கொண்ட வாழைத்தார்கள் ஏலத்துக்கு வந்தது இதுதான் முதன்முறை'' என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#



source https://www.vikatan.com/news/agriculture/karur-farmers-are-surprised-as-350-banana-grew-in-a-single-tree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக