டூவிலர் லோன்கட்ட வேண்டிய பணத்தை வசூல் செய்தவர், அந்த பணத்தை நிதிநிறுவனத்தில் கட்டாமல் அவருடைய சொந்தக் கடனை கட்டிய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் தனியார் நிதி நிறுவனமான மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் வன்னிமலை தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். டூவிலர் லோன் மற்றும் பர்ஸ்னல் லோன் தேவைகளுக்காகவும் இந்நிறுவனத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிதிநிறுவனத்தில் பைக் லோன் வாங்கிய 42 பேரிடம் இவர் வசூலித்த ரூ.3.70 லட்சம் பணத்தை கட்டாமல் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து நிதி நிறுவனம் அதிகாரிகள் மாதம் தோறும் செலுத்தவேண்டிய இ.எம்.ஐ கட்டவில்லையே என்று வாடிக்கையாளர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் ஏற்கெனவே கட்டிவிட்டோம். எத்தனை முறைதான் கட்டுவது என்று நிதிநிறுவன அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சிலர் வாக்குவாதமும் செய்திருக்கிறார்கள். அதன்பின் ரமேஷ்தான் பணத்தை கட்டாமல் லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பணம் செலுத்திய பலர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் அகிலா என்ற பெண் புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மை தெரியவர ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.”கலெக்சன் ஏஜெண்டாக இருப்பவர் ரமேஷ். இவர் நிறுவனத்தில் லோன் வாங்கியவர்கள் மற்றும் டூவிலர் லோன் வாங்கியவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தானே கட்டிவிடுவதாக சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
அந்த பணத்தை என்ன செய்தார் என்று விசாரிக்கையில் அவர் வீட்டில் ஏதோ கடன் இருந்திருக்கும் போல. அந்த கடன்களை இந்த பணத்தால் அடைத்திருக்கிறார். மீதி பணம் எங்கே என்று கேட்டால் செலவு செய்துவிட்டதாக சொல்கிறார். புகாரின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/police-arrested-the-finance-company-agent-who-paid-off-his-loan-by-customers-debt
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக