Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

''எம்ஜிஆர்-க்குக் குத்துச்சண்டை, கராத்தேனா அவ்ளோ பிடிக்கும்!'' நினைவு பகிரும் டாக்டர்

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றிருக்கும் குத்துச்சண்டை பற்றிய படமான 'சார்பட்டா' படத்தில் அரசியல் குத்துகளும் இருந்தது. ''எம்.ஜி.ஆர் ஆட்சிக்கும் விளையாட்டுக்கும் தொடர்பு இல்லாதது போல படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. உண்மையில் எம்.ஜி.ஆர் விளையாட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தந்தார்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த க.ராஜாராமின் உடன் பிறந்த சகோதரருமான டாக்டர் காந்தராஜ். இது குறித்து அவரிடம் பேசினேன்.

யமாகுச்சியுடன் எம்.ஜி.ஆர்
யமாகுச்சி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்

''எம்.ஜி.ஆர்-க்கு கராத்தே, குத்துச்சண்டைனா அவ்ளோ பிடிக்கும். அவருக்கு களரி, மல்யுத்தம் உட்பட எல்லா விளையாட்டுகளிலுமே ஆர்வம் உண்டுங்கிற விஷயம் சினிமா, அரசியல் வட்டாரத்துல எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம்தான். அவருடைய முதல் ஆட்சி 5 வருஷத்தை கடக்கறதுக்கு முன்னாடியே மத்திய அரசால் கலைக்கப்பட்டது நினைவிருக்கலாம். கலைக்கப்பட்ட பிறகு 1980-ல் நடந்த தேர்தல்ல மறுபடியும் அமோகமா ஜெயிச்சதும் அவர் கலந்துகிட்ட முதல் நிகழ்ச்சியே ஒரு விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிதான்.

சென்னை கன்னிமாரா ஓட்டல்ல எம்.ஜி.ஆர்-க்கு நல்லாவே பரிச்சயமான கராத்தே மணி ஏற்பாடு செய்திருந்த விழா அது. ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கராத்தே வீரர் யமாகுச்சி நிகழ்ச்சியில கலந்துகிட்டார். அந்த நிகழ்ச்சி மாலை நடக்குது. முதல்வரா பதவி ஏத்துட்டு நேரா இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் எம்.ஜி.ஆர். விழாவுல யமாகுச்சிக்கு குத்து விளக்கு நினைவுப் பரிசா எம்.ஜி.ஆர் கையால் வழங்கப்பட்டது.

யமாகுச்சி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்
டாக்டர் காந்தராஜ்

வருஷா வருஷம் பொங்கல் தினத்தையொட்டி தமிழ் வீர விளையாட்டுகளை ஒரே இடத்தில் நடத்துற ஒரு திட்டமும் எம்ஜிஆர்கிட்ட இருந்தது. அது தொடர்பான வேலைகளை முடுக்கி விட்டிருந்தார். முதல் வருஷம் மதுரையில நடத்தலாம்னு நினைச்சிருந்தார். இப்போதைய அமைச்சரும் அப்ப எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவரா இருந்தவருமான‌ கே.கே.எஸ்.எஸ்.ஆர் கிட்டக்கூட அது சம்பந்தமான வேலைகளைக் கொடுத்திருந்ததா பேசிக்கிட்டாங்க. ஆனா அந்த முயற்சி கைகூடும் முன்னரே மரணம் அவரைத் தழுவிடுச்சு'' என்கிறார் காந்தராஜ்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/mgr-loves-sports-especially-boxing-and-karate-says-his-close-doctor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக