கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரகத்துக்கு செல்லும் பார்சல்களை விமான நிலையத்தில் சோதனை செய்வது இல்லை. இதை பயன்படுத்தி திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஸரித் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் பலமுறை தங்கம் கடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் உணவுப்பொருட்கள் என்ற பெயரில் யு.ஏ.இ தூதரகத்துக்கு பார்சலில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த பார்சலை பெற்றுக்கொள்ள யு.ஏ.இ தூதரக கடிதத்துடன் விமான நிலையத்துக்குச் சென்ற யு.ஏ.இ தூதரக முன்னாள் ஊழியர் ஸரித் குமார் கைது செய்யப்பட்டார். மேலும் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸரித் குமார் , ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் 2017-ல் முதல்வர் பினராயி விஜயன் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்தபோது டாலர் கடத்தப்பட்டதாக சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: தங்கம் கடத்தல் வழக்கு: 98 நாள்கள் சிறை... 3 வழக்கிலும் ஜாமீன்! புத்தகத்துடன் வெளியேறிய சிவசங்கரன்!
தூதரக அதிகாரியை தவிர்த்து வேறு யாராவது கடத்துவதில் ஈடுபட்டார்களா என சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் கேட்டதற்கு முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும், முதலமைச்சர் பினராயி விஜயனும் டாலர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் பெயரை பயன்படுத்தி ஒரு பாக்கெட் கைமாறியதாகவும், அந்த பாக்கெட்டில் டாலர் இருந்ததாகவும் ஸ்வப்னா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம். ஆனால் ஸ்வப்னா, ஸரித் ஆகியோர் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது. அதனால்தான் இதுகுறித்து முதல்வரிடம் விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது.
Also Read: `பினராயி விஜயனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிர்பந்திக்கிறார்கள்’ - ஸ்வப்னா ஆடியோ பரபரப்பு
source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-cm-smuggled-foreign-currency-into-uae-swapna-suresh-statement-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக