புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கீரமங்கலத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது, 10 அடிக்கும் மேல் உயரமுள்ள வீட்டுப் பூஜை அறை மேற்கூரையில் உள்ள கொக்கியில் நூல் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். இதனைக் கண்ட சிறுமியின் சித்தப்பா செந்தில், பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன் சிறுமியைக் கீழே இறக்கினர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கும், கீரமங்கலம் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீஸார் தொடர்ந்து, மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக , தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்தனர். இறந்துபோன சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமியின் தந்தை கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
தனது மகளை தாத்தா, சித்தப்பா செந்தில் அரவணைப்பில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். சிறுமி கீரமங்கலத்தில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், 13 வயது சிறுமியின் வயிற்றில் 7 மாத சிசு இறந்த நிலையிலிருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை டி.என்.ஏ ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கினர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சிறுமியை அவரின் சித்தப்பா செந்தில் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதற்கிடையே தான் செந்தில் தலைமறையாகி உள்ளார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்துவதுடன் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
Also Read: `மார்டன் டிரெஸ் பெண்கள்தான் இவர்கள் டார்கெட்!' - பாலியல் சீண்டலோடு வழிப்பறியும் செய்த இளைஞர்கள்
இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``சிறுமியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட அவரின் சித்தப்பா செந்தில், வெளியே சென்று தனக்கு எதுவுமே தெரியாதது போல உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார்.
டி.என்.ஏ முடிவு வரவேண்டும். டி.என்.ஏ முடிவுக்குப் பிறகு தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தாரா என்பது குறித்து தெரியவரும்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-death-shock-after-the-autopsy-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக