Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

சினிமா என்பது இயக்குநரின் ஊடகமா, நடிகர்களின் ஊடகமா? - ஜான் ஆபிரகாம் கருத்து என்ன?

சினிமா என்றால் வெறுமனே பொழுதுபோக்கு, சென்டிமென்ட் என்ற நிலையை மாற்றி தீவிரமான விஷயங்களை சினிமாவாக உருவாக்கும் சுயாதீனத் திரைப்படங்கள் அதிகரித்து வரும் காலம் இது. தனிப்பட்ட தயாரிப்பாளரையோ தயாரிப்பு நிறுவனங்களையோ சாராமல் மக்களிடமே நிதி வசூலித்து உருவாக்கப்படும் திரைப்படங்கள் Crowd Funding Movies. இந்த இரண்டு முயற்சிகளுக்கும் முன்னோடியாக இருந்த கலைஞன் ஜான் ஆபிரகாம்.

ஜான் ஆபிரகாம் இயக்கிய 'அக்கிரகாரத்தில் கழுதை', மாநில மொழிக்கான சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது ஏன் தெரியுமா?

சினிமா என்பது இயக்குநரின் ஊடகமா, நடிகர்களின் ஊடகமா? - ஜான் ஆபிரகாம் கருத்து என்ன?

ஜான் ஆபிரகாம் இறுதியாக இயக்கிய ஆவணப்படம் தமிழ்நாட்டின் முக்கியமான தலைவரைப் பற்றியது. அவர் யார் என்று தெரியுமா?

விருதுகள் பெற்றாலும் 25 ரூபாய் பணம் இல்லாமல் வறிய சூழலில் வாழ்ந்த, வணிகத்துக்கும் விருதுக்கும் கலையை விற்றுவிடாத, விட்டுக்கொடுக்காத, சமரசமற்ற கலைஞன் ஜான் ஆபிரகாம் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/the-man-who-changed-the-face-of-indie-cinema-john-abraham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக