சன் மியூசிக், SS மியூசிக் என தமிழில் மியூசிக் சேனல்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்தவரான இவர் 2001 முதல் 2011 வரை சென்னையில் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். சன் மியூசிக் விஜேவாக இருந்தபோது இவரது தமிழ் உச்சரிப்பும், சிரித்த முகத்துடன் எல்லா நேயர்களையும் வரவேற்கும் தன்மையும் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
தனக்கென தனி ரசிகர் படையையே கொண்டிருந்த ஆனந்த கண்ணன் பின்னர் சன் டிவியில் இருந்து விலகி ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும், சில டிவி சேனல்களில் பகுதி நேர விஜேவாகவும் பணியாற்றினார்.
மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர் ஆனந்த கண்ணன். இவரது மனைவி ராணியும் சிங்கப்பூரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. 2011-ல் இருந்து மீண்டும் முழுமையாக சிங்கப்பூருக்குப் போய் குடியேறிய ஆனந்த கண்ணன் சமீபத்தில் Bile Duct Cancer மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.
source https://cinema.vikatan.com/television/popular-tv-vj-ananda-kannan-died-due-to-cancer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக