Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

விழுப்புரம்: வாரிசு சான்றிதழுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ! - வைரலான வீடியோ மூலம் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்துள்ளது நவமால் காப்பேர் கிராமம். இந்த கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சப்ராபீபி. இந்த அதிகாரி வாரிசு சான்றிதழ் தருவதற்காக லஞ்சம் வாங்கிய வீடியோ தான் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. நவமால் காப்பேர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட காயத்ரி நகரை சேர்ந்தவர் சர்புதீன். இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபியை நாடியுள்ளார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு 2000 ரூபாய் தர வேண்டும் என சப்ராபீபி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் முதற்கட்டமான 500 ரூபாயை கொடுத்துள்ளார் சர்புதீன். இரண்டாவது முறையாக 1500 ரூபாய் தரும் போது தான், இந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

லஞ்சம்

இந்த வீடியோவில்... 'சான்றிதழ் கொஞ்சம் டைம் எடுத்துதான் கிடைக்கும்' என விவரிக்கும் கிராம நிர்வாக அலுவலர். அவரிடம், வாரிசு சான்றிதழ் கேட்க சென்ற நபர் ரூபாய் நோட்டுகளை நீட்ட, உதவியாளரை அழைத்து `அதை வாங்கிட்டு வாங்க; என்று வி.ஏ.ஓ கூறுகிறார். உதவியாளரும் அந்த பணத்தை வாங்கிக்கொள்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் மளமளவென பரவ தொடங்கி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விழுப்புரம் தாசில்தாரிடம் பேசினோம். "அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. விசாரணையும் முடியும் தருவாயில் உள்ளது. நாளை (அதாவது இன்று (25.08.2021)) முடிவு தெரியவரும்" என்றார்.

Also Read: விழுப்புரம் சிறுவன் மரணம்; கொந்தளித்த இணையம்! | The Imperfect Show



source https://www.vikatan.com/news/crime/village-administration-officer-who-took-bribe-to-give-certificate-shocked-by-the-released-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக