டிசம்பர் 14 -ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர், கால்நடை மருத்துவர்கள்குழு மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் 'உடைந்த கொம்பன்' சங்கர் யானையைப் பிடிக்கக் வனத்துறையினர் களமிறங்கினர்.(இடம் - சிங்கோனா,சேரம்பாடி)
டிசம்பர் 16 - சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் உடைந்த கொம்பனை பார்த்ததாக அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல்அளிக்க கும்கி யானை சப்பந்தோடு பகுதிக்கு லாரியில் அழைத்து வரப்பட்டது.
டிசம்பர் 16 - பன்னி ஷெட் பகுதியில் இருந்து சப்பந்தோட்டில் உள்ள, துண்டாடப்பட்ட வனப்பகுதிக்குள் யானை உலவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிரோன் உதவியுடன் வனத்துறையினர் யானையைத் தேடினர்.
டிசம்பர் 17 - கால்நடை மருத்துவர் மனோகரன் உடைந்த கொம்பன் யானை மீது செலுத்திய மயக்க ஊசி சரியாக பதியாத நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவர் அந்த ஊசியைக் கைப்பற்றி மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்.
டிசம்பர் 18 - உடைந்த கொம்பன் சங்கர் காட்டு யானை வழித்தடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
டிசம்பர் 20 - கும்கி யானையின் பாகன்கள் காட்டு யானை விரைவில் பிடிப்பட வேண்டும் என சிங்கோனாவில் இருந்த கோயிலில் பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் யானை கேரள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதனால், யானையைத் தேடும் திட்டத்தை வனத்துறையினர் தற்காலிகமாகக் கைவிட்டனர்.
பிப்ரவரி 6 - உடைந்த கொம்பன் யானை தமிழக எல்லைக்குள் நுழைந்தது. யானையைப் பிடிக்க வனத்துறையினர் மீண்டும் களம் இறங்கினர்
பிப்ரவரி 09 - சேரம்பாடியை அடுத்த புதுப்பாடி காட்டுப்பகுதியில் யானை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, உயரமான மரத்தின் மீது ஏறி நின்றபடி வன ஊழியர் ஒருவர் யானை நடமாட்டத்தை கண்காணித்தார்.
பிப்ரவரி 09 - மயக்க ஊசி செலுத்த வசதியான இடத்தை நோக்கி யானையை நகர்த்த அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை யானையின் அருகே வனத்துறையினர் வீசினர்.
பிப்ரவரி 09 - பெரும் வெடி சத்தத்திற்கு மத்தியில் புதுப்பாடி பகுதியின் படிக்கட்டுகளை கடந்து யானை ஓட, வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ் யானை மீது மயக்க ஊசி செலுத்த முயற்சித்தார்.
பிப்ரவரி 10 - புஞ்சைக் கொல்லி வனப்பகுதியில் உடைந்த கொம்பன் சங்கர் யானை மீது கால்நடை மருத்துவர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தினார், கூட்டத்துடன் இருந்த அந்த யானையை நடுவிலும் இதர யானைகள் முன்னாலும், பின்னாலும் அணைத்தபடி ஓட்டம் பிடித்தன.
பிப்ரவரி 10 - புஞ்சைக் கொல்லி வனப்பகுதியில் இருந்து டேன் டீ 10 லைன்ஸ் சுடுகாடு வரை ஓடிய யானை கூட்டத்தை வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ் பின்தொடர்ந்து வந்து இரண்டாவது டோஸ் மயக்க மருத்தை செலுத்த முயன்றார். எதிர்பாராத விதமாக மயக்க ஊசி யானை மீது பாயவில்லை.
பிப்ரவரி 10 - இரண்டாவது டோஸ் மயக்க ஊசி செலுத்தப்படாத விரக்தியில் வன ஊழியர்கள்.
பிப்ரவரி 11 - மாலை 4 மணி முதல் ஐயப்பன் கோயில் பகுதியில் யானைக் கூட்டத்துடன் உடைந்த கொம்பன் சங்கர் யானையைப் பார்க்க முடிந்தது, அந்த யானைக் கூட்டத்தின் செயல்பாடுகள், பிரிவு உபசார நிகழ்வை போல இருந்தது. அன்றைய தினம் யானையைத் தேடும் பணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 12 - வனக் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், ராஜேஷ், சுகுமாரன், விஜயராகவன் மற்றும் டாக்டர் அசோகன் அடங்கிய குழுவினர் யானை மீது மரத்தின் மேல் பரண் அமைத்து மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர்.
பிப்ரவரி 12 - திட்டமிட்ட படி யானையின் மீது டாக்டர்கள் விஜயராகவன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இரண்டு டோஸ் மயக்க ஊசியையும் உரிய நேரத்தில் செலுத்தியதும், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமின் மூத்த யானை பாகன் கருமாரன் மயக்க நிலையில் இருந்த யானையின் கால்களை கயிற்றால் கட்டினார்.
பிப்ரவரி 12 - கால்கள் கட்டப்பட்ட யானையை வனத்துறையினர் பள்ளத்தில் இருந்து மட்டமான பகுதிக்கு இழுத்தனர்.
பிப்ரவரி 12 - யானையை மீட்கும பணியில் ஈடுபட்டவர்களுள் சிலர்.
பிப்ரவரி 12 - கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட உடைந்த கொம்பன் சங்கர்.
பிப்ரவரி 12 - அன்று மாலை சுமார் 7 மணியளவில் உடைந்த கொம்பன் சங்கர் யானை டேன் டீ 10 லைன்ஸ் சுடுகாடு பகுதியில் இருந்து லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டடை அப்பகுதியினர் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
பிப்ரவரி 12 - இரவு 10 மணியளவில் உடைந்த கொம்பன் சங்கர் யானை முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்வரப்பட்டது.
பிப்ரவரி 12 - உடைந்த கொம்பன் சங்கர் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த க்ராலுக்கு பூஜை செய்யப்பட்டது.
பிப்ரவரி 12 - உடைந்த கொம்பன் சங்கர் யானையின் பின்னங்கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை க்ராலுக்குள் விட்டு இழுத்தனர்.
பிப்ரவரி 12 - உடைந்த கொம்பன் சங்கர் யானையின் பின்னங்கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை க்ராலுக்குள் விட்டு இழுத்தனர்.
பிப்ரவரி 12 - இரவு 11 மணிக்கு க்ரால் அடைக்கப்பட்டது.
ஜூன் 16 - முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமில் பாகனின் கட்டளைக்கு பணிந்து முன்னங்காலை தூக்கி நிற்கும் உடைந்த கொம்பன் சங்கர்.
ஜூலை 4 - 140 நாள்களுக்குப் பின்னர் இன்று க்ராலில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு முன்பாக அங்கு உள்ள பாகன்கள் அவர்கள் முறைப்படி பூஜை செய்து வழிபட்டனர்.
ஜூலை 4 - முற்றிலுமாக பெரிய மரங்களால் அமைக்கப்பட்டிருந்த க்ராலை (மரக்கூண்டு) கும்கி யானை ஒன்று திறந்தது.
ஜூலை 4 - இந்த யானையை கடந்த 140 நாள்களாக பராமரித்து வந்த பாகன் விக்ரம் என்பவரின் கையில் இருந்த குச்சியை, தும்பிக்கையில் பிடித்தபடி ஒரு குழந்தையை போல க்ராலில் இருந்து ஆக்ரோஷம் இல்லாத உடைந்த கொம்பன் சங்கர் யானை வெளியில் வந்தது.
ஜூலை 4 - இந்த படத்தில் இருக்கும் பாகன்களை தவிர மற்றவர்கள் அனைவரும் பந்தலூர் பகுதியில் இந்த யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள். க்ராலில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட உடைந்த கொம்பனை பார்த்துச் செல்ல வந்திருந்தனர்.
source https://www.vikatan.com/news/album/how-broken-tusker-komban-elephant-rescued-by-forest-officers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக