Ad

சனி, 17 ஜூலை, 2021

தொடர் மழையால் அடியோடு சாய்ந்த பூண்டு பயிர்கள்; கலக்கத்தில் விவசாயிகள்; உதவுமா அரசு?

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறி விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கேரட், பட்டாணி, பீட்ரூட், டர்னிப், உருளைக்கிழங்கு, பூண்டு போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் அதிக அளவு பூண்டு பயிரிடப்படுகிறது.

சாய்ந்த பூண்டு பயிர்கள்

Also Read: நீலகிரி: இடைவிடாமல் தொடரும் காற்று, மழை! - 24 மணி நேரமும் தயார்நிலையில் மீட்புக் குழுவினர்

பல ஹெக்டேர் பரப்பளவிலான பூண்டு பயிர்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. தென்மேற்குப் பருவக்காற்றின் தீவிரம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நிலவிய பலத்த சூறாவளிக் காற்று, மழையால் இந்தப் பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்தன. அறுவடைக்குத் தயாரக இருந்த பூண்டு பயிர்கள் காற்றால் சேதமடைந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

எம்.பாலாடா பகுதியில் பூண்டு பயிரிட்டிருந்த விவசாயி முத்துசாமி நம்மிடம் பேசுகையில், ``ஒரு ஏக்கர்ல பூண்டு போட்டிருந்தேன். முதலீடு செலவு ரொம்ப அதிகம். 10 டன் வரை மகசூல் கிடைக்கும்னு அறுவடைக்கு தயாரா இருந்தோம். காத்து மழையால செடியெல்லாம் சாஞ்சிருச்சு. பாதிக்கு பாதி கூட கைக்கு கிடைக்காது.

விவசாயி முத்துசாமி

போன வருஷமும் மழைல பாதிக்கப்பட்டோம். இந்த வருஷமும் இப்படி ஆயிடிச்சு. என்ன பண்றதுனு தெரியல. சாஞ்ச பூண்டுச் செடியை ஆள் வச்சு கட்டிட்டு இருக்கோம். பூண்டு பல் விரிஞ்சிட்டதால மண்டில நல்ல விலைக்கும் போகாது. போட்ட முதல் கூட கிடைக்காது. அரசு ஏதாச்சும் குடுத்தா அடுத்த வெள்ளாமைக்கு உதவும்" என வேதனையைப் பகிர்ந்தார்.



source https://www.vikatan.com/news/agriculture/heavy-rain-in-nilgiris-damaged-garlic-crops-farmers-request-compensation-from-govt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக