Ad

திங்கள், 12 ஜூலை, 2021

செல்வராகவன் - தனுஷின் 'ராயன்'... 'நானே வருவேன்' கதை மாறியதன் பின்னணி என்ன?

10 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது, அதனை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியான சில மாதங்களில் அதற்கான போட்டோஷூட் நடத்தி 'நானே வருவேன்' என்ற டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பத்து வருடங்களுக்கு பிறகு, அண்ணனும் தம்பியும் இணைகிறார்கள் என்பதே படத்திற்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தனுஷ் கைவசம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. எந்தப் படத்தை எப்போது ஆரம்பித்து முடிப்பார் என்பது தனுஷுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 'கிரே மேன்' படத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆகஸ்ட் 20-ம் தேதி 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார் இயக்குநர் செல்வராகவன். அதே சமயத்தில், மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிப்பதாக இருந்தது.

தனுஷ்

'பட்டாஸ்', 'அசுரன்' என இந்த இரண்டு படங்களையும் அப்படிதான் ஒரே நேரத்தில் நடித்து முடித்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தலைப்பு மாறுகிறது என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், சினிமாத்துறையில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

செல்வராகவன் - தனுஷ் படத்தின் தலைப்பு மட்டும் மாறவில்லை, கதையே மாறுகிறதாம். 'நானே வருவேன்' என்ற கதைக்கு பதிலாக 'ராயன்' என்ற கதையை இயக்கவிருக்கிறார், செல்வராகவன். ராயபுரத்தில் நடக்கும் மூன்று அண்ணன் தம்பிகளின் கதை என்கிறார்கள். அதில் தனுஷின் தம்பியாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். செப்டம்பரில் ஷூட்டிங். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நானே வருவேன்' த்ரில்லர் கதை. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்று இதுவும் ஃபேன்டசி த்ரில்லர் கதையாக இருந்ததால் 'புதுப்பேட்டை' போன்று ஒரு ஆக்ஷன், எமோஷன் வடசென்னை கதைக்கு மாறியிருக்கிறார் செல்வராகவன்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/selavaraghavan-dhanush-movie-script-changed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக