Ad

திங்கள், 19 ஜூலை, 2021

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞன்; 32 ஆண்டுகள் சிறை; திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 2019-ம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி, 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக புலன்விசாரணை செய்து, அந்த இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத்தந்த முத்துப்பேட்டை காவல்துறையினருக்கு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரவிந்த். இருபத்திரெண்டு வயது இளைஞரான அரவிந்த், இப்பகுதியைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமியை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்ட முத்துப்பேட்டை காவல்துறையினர், நீதிமன்றத்தில் தகுந்த சாட்சியங்களோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள். இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தராஜன், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் அரவிந்திற்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 25000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பைத் தொடர்ந்து இளைஞர் அரவிந்த்தை முத்துப்பேட்டை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத்தந்த முத்துப்பேட்டை காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட்ப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். மேலும் இதுவரை பதிவாகியுள்ள அனைத்து போக்ஸோ வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/crime/in-tiruvaroor-court-sentences-youth-to-32-years-in-prison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக