Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

கோவை: பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு; அதிர்ச்சி பின்னணி!

சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த் ஷர்மா (49). எம்.என்.சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் 48 வயது பெண், ஆனந்த் ஷர்மா மீது புகாரளித்துள்ளார். அதில், “என் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரிடம் இருந்து பிரிந்து கோவைக்கு குடியேறினேன்.

கோவை

Also Read: சிவசங்கர் பாபா: லாரி ஷெட் டு ராமராஜ்யம்..! - பாலியல் வழக்கில் கைதான சிவசங்கரன் `பகவான்’ ஆன பின்னணி!

எனக்கு 3 குழந்தைகள் இருப்பதால், எதிர்காலம் குறித்து கவலையடைந்தேன். என் பிசினஸை மறுகட்டமைப்பு செய்ய முடிவெடுத்தேன். எனது விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றினேன்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆனந்த் ஷர்மா என்னை தொடர்பு கொண்டு, என்னுடைய பிசினஸில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு அவருடன் அடிக்கடி உரையாடினேன். தான் விவாகரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார்.

உரையாடல்

அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், 13 வயது இளைய மகனுடன் தனித்து இருப்பதாகவும் கூறினார். நாளடைவில் அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதற்கு நான், ‘எனக்கு இடைக்கால உறவுகளில் உடன்பாடு இல்லை’ என்று கூறிவிட்டேன்.

பிறகு நான் பிசினஸ் விஷயமாக சென்னை சென்றபோது, ஆனந்த் ஷர்மா மீண்டும் என்னை காதலிப்பதாக கூறினார். ‘எனக்கு என் வேலை, குழந்தைகள், நீ மட்டும்தான் முக்கியம். உனக்கு விவாகரத்துக்கு நான் உதவி செய்கிறேன்’ என்று கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். பிறகு அவர் பாலியல் ரீதியாக உரிமை கொண்டாட முயன்றார்.

ஆனந்த் ஷர்மா

இதனிடையே என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் வைத்துக் கொண்டார். கடந்த தீபாவளி மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஆனந்த் விவாகரத்து ஆனதாக சொன்ன கூறிய மனைவி அவர்களுடன் இருந்தார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களைக் கூறினார். ஒருமுறை எதேர்ச்சையாக அவரது மொபைலை பார்த்தபோது, அதில் பல பெண்களுடன் இரவு நேரத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பேசியிருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அதன்பிறகு, பலரும் ஆனந்த் ஷர்மா குறித்து கூறினர். என்னைப் போல பல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் ஆனந்த் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது ஆனந்த் ஷர்மா மற்றும் அவரது சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினர். திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிய ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் பெண் காவல்துறையில் புகாரளித்தார். நடவடிக்கை இல்லாததால், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

தமிழக காவல்துறை

அதன் அடிப்படையில் மத்திய மகளிர் காவல்துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனந்த் ஷர்மா 10 பெண்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன.



source https://www.vikatan.com/news/crime/fir-filed-against-chennai-man-for-harassing-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக