Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

``சட்டப்பேரவையில் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்"- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழக சட்ட சபையில் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர்கள் என அனைவரும் பதவியேற்றுள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆங்கில உறையுடன் கூட்டம் தொடங்குகிறது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைச் சபையில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அவையில் முடிவு செய்யப்படும். முன்னதாக கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "சட்­ட­சபை கூட்­டத் தொடரை நேர­டி­யாக ஒளி­ப­ரப்ப வேண்­டும் என்­பது எங்­க­ளின் நிலைப்­பாடு. அது கட்­டா­யம் நிறை­வேற்­றப்­படும். ‘நீட்’ தேர்வு குறித்த பாதிப்­பு­களை ஆராய, ஓய்வு பெற்ற நீதி­பதி ஏ.கே.ராஜன் தலை­மை­யில் குழு அமைக­கப்­பட்­டுள்­ளது. அக்­குழு ஆராய்ந்து பரிந்­து­ரை­களை அளிக்­கும். பிர­த­மர் மோடியை முதல்­வர் ஸ்டா­லின் சந்­தித்­த­போது இது­தொ­டர்­பாக வலி­யு­றுத்தி உள்­ளார். நீட் தேர்வு குறித்து விரை­வில் நல்ல முடிவு வரும். சட்டசபை­யில் ஜன­நா­யக முறைப்­படி, விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்­கப்­படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அமைச்சர், "திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும் முந்தைய திமுக அரசு வரியைக் குறைத்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் மாநில வரியைக் குறைப்பது தற்போது சாத்தியமில்லை. பெட்ரோல் மீது ரூபாய் 10-ஆக இருந்த வரியை ஒன்றிய அரசு 32.90-ஆக உயர்த்தியுள்ளது. மேலும், பெட்ரோல் மீதான 32.90 ரூபாய் வரியில் 31.50-ஐ ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது . மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி தொகையையும் ஒன்றிய அரசு தர மறுக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையைக் குறைக்கவில்லை. தமிழக அரசுக்கு பெட்ரோலிய பொருள்கள் மூலம் வருவாய் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் பொருள்கள் மீதான மாநில வரியைக் குறைத்தால் அது தற்போது ஒன்றிய அரசுக்கு சாதகமாகி விடும்" என்றார். ஏற்கனவே, சட்டமன்றத் கூட்டத்தொடரில் மேகதாது விவகாரம், நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/financial-statement-of-tn-will-be-published-tomorrow-on-assembly-says-finance-minister-palanivel-thiagarajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக