Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகள்; 3 விதமாக மாவட்டங்கள் பிரிப்பு; எதற்கெல்லாம் புதிதாக அனுமதி?

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைய குறைய சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீ்ட்டித்திருந்தது தமிழக அரசு. மருத்துவ குழுக்களின் ஆலோசனையின்படி கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய தளர்வுகளுடனும், பிற 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளுடனும் தமிழக அரசு அறிவித்திருந்த ஊரடங்கு நாளை 21/06/2021 உடன் முடிவடைவதையொட்டி இன்று புதிய தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக ஊரடங்கின் தளர்வுகள், கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து மருத்துவக் குழுவுடன் முதலைமச்சர் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை கவனமான முறையில் அறிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தது. மூன்று விதமாக மாவட்டங்களைப் பிரித்து ஜூன் 28 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - 11 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை 2 - 23 மாவட்டங்கள்

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்

வகை 3 - 4 மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.

இவற்றில்,வகை 1-ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை இந்த 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் , ஊரடங்கு தொடரும்.

ஊரடங்கு

வகை -3 -ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மாவட்டங்களுகிடையே மட்டும் 50 சதவிகித பயணிகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவிகித பயணிகளுடன் மெட்ரோ ரயிலும் இயங்கும்.

சென்னை உட்பட 27 மாவட்டங்களில் ( வகை -2 மற்றும் வகை-3) மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் இரவு 7 மணிவரை அனுமதி.

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

கட்டுமான நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதி.

வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவு இன்றி செல்ல அனுமதி. வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி.

அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

வகை-2, வகை-3 ஆகியவற்றில் உள்ள மவாட்டங்களுக்கான முழு தளர்வுகளின் விவரங்களைக் காண..



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-are-the-new-relaxations-in-tamilnadu-curfew

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக