Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

Live Updates: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி! - தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் நோ டீசல்!

இன்று விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தவுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் டிராக்டர்
களுக்கு டீசல் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 60-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். குடியரசு தினமான இன்று, டெல்லியை நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்தனர். இந்த பேரணியின் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ட்ராக்டர்கள் வரை கலந்து கொள்ளும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டிராக்டர்

இதனிடையே இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை முடிவெடுக்க உத்தரவிட்டது. டெல்லி காவல்துறை, குடியரசு தின விழா முடிந்த பின்னர் பேரணியை தொடங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்கியது. காஜிப்பூர், சிங்கு, சில்லா, டிக்ரி எல்லை வழியாகவே டெல்லிக்குள் நுழைய வேண்டும். மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக் கூடாதுஎன்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/live-updates-on-farmers-tractor-rally-in-delhi-against-farm-law

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக