Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

`முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு விதிகள் பழைமையானவை!’ - உச்ச நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு

தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. அதனைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கினை இன்றளவும் நினைக்கும் தேனி மக்கள், அவரது பிறந்தநாளில், பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், பென்னிகுவிக்கின் 180வது பிறந்தநாள் 10 நாட்களுக்கு முன்னர் தேனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அணை விவகாரம் தொடர்பாக புதிய குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில், கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது விவசாயிகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

Also Read: பெருமைமிகு முல்லைப்பெரியாறு அணை - 125 வது ஆண்டு சிறப்புப் பகிர்வு

முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அணை அமைந்துள்ள இடம், கேரளாவின் பகுதியாக இருந்தாலும், அணையினை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் தமிழக அரசு மற்றும் தமிழக பொதுப்பணித்துறை கவனித்துவருகிறது. இந்நிலையில், அணையின் பராமரிப்பு தொடர்பான தமிழக அரசின் விதிகள் மிகவும் பழமையானது. அணை தொடர்பான முழு விவரங்களை எங்களிடம் கொடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை கருதி, அணைப் பராமரிப்பு தொடர்பாக புதிய விதியினை வகுக்க வேண்டும் என கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணை

Also Read: முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை! - கேரளாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ``அணையின் பராமரிப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அணை பலமாகவும், நல்ல நிலையிலும் உள்ளது. புதிய விதிகள் வகுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றனர்.

தேனி மாவட்ட விவசாயிகள் கூறும் போது, “அணை விவகாரத்தில் ஏதாவது பிரச்னை செய்துகொண்டேஇருப்பது தான் கேரளாவின் வேலை. தமிழக அரசு வலுவான பதிலை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அணை உறுதியாக உள்ளது என உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இறுதி தீர்ப்பை மீறும் செயலாக கேரளா அரசு நடந்துகொள்வதாக தங்களது கண்டனத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/the-kerala-government-has-filed-a-petition-in-the-sc-alleging-that-the-maintenance-rules-are-outdated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக