Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

`மு.க ஸ்டாலின் ஆகிய நான்... 100 நாளில் தீர்வு!’ - புதிய கோணத்தில் தி.மு.க பிரசாரம்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சி தலைவர்களும் களத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.கவை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர், ``சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் புதிய முறையில், புதிய கோணத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். அது குறித்து பேசவே இந்த செய்தியாளர் சந்திப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``அ.தி.மு.க ஆட்சியில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பெரிய முதலீடுகளை தமிழக அரசால் ஏற்க முடியவில்லை. `மு.க ஸ்டாலின் ஆகிய நான், தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். மக்கள் பிரச்னையை தீர்பதே எனது முதல்பணி” என்றார். தொடர்ந்து அடுத்தக்கட்ட பிரசார திட்டம் குறித்து பேசினார் ஸ்டாலின்.

தி.மு.க கிராம சபை - ஸ்டாலின்

``வரும் 29-ம் தேதி முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பரப்புரையை திருவண்ணாமலையில் தொடங்குகிறோம். மக்களிடம் நோட்டீஸ் வழங்கப்படும். மக்கள் குறிப்பிடும் பிரச்னைகள் முதலில் தீர்க்கப்படும். தி.மு.க ஆட்சி அமைந்ததும் மக்கள் பிரச்னைகள் போர்க்கால அடிப்படையில் 100 நாள்களில் தீர்க்கப்படும். இதனை எப்படி செய்வோம் என்ற சந்தேகம் வேண்டாம். சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். தேர்தல் அறிக்கை வேறு, இந்த 100 நாள் திட்டம் என்பது வேறு” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-press-meet-regarding-tn-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக