வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
``விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வந்ததிலிருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வெளியே வரவும் அனுமதிக்கப்படவில்லை. அவரை பா.ஜ.க வின் டெல்லி காவல்துறை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது” என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தஞ்சை விவசாயிகள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கடைகள் அடைப்பு!
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடர்ந்து விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்டப்படவில்லை. விவசாயிகள், சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
நாளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் நிலையில் இன்று நாடு தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் பந்த்-க்கும் வரவேற்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி உட்பட 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதேவேளையில் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் போக்குவரத்துக் கழகம் உறுதியாக இருக்கிறது. `தமிழகத்திலுள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,000 மாநகர பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், நகர பஸ்கள் என அனைத்து பஸ்களும் இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/08-12-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக