Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

`லேசான மயக்கம், உடல் சோர்வு இருந்தது; நலமாக இருக்கிறேன்!’- தி.மு.க தலைவர் ஸ்டாலின் #NowAtVikatan

நலமாக இருக்கிறேன்!- ஸ்டாலின்

தனக்கு லேசான மயக்கம், உடல்சோர்வு இருந்ததாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிவந்த நிலையில், ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், ஸ்டாலின் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``எனக்கு லேசான மயக்கம் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி பி.பி, ஈ.சி.ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றபடி ஏதுமில்லை. சிறிதுநேரம் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: சேலம்: `விவசாயிகள் டெல்லியை நோக்கிப் போர் தொடுத்திருக்கிறார்கள்!’ - ஸ்டாலின்



source https://www.vikatan.com/news/general-news/11-12-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக