Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

`அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை!’ - ஹெச்.ராஜா

``ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்க கூடியவர், அவரைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அமித்ஷா வருகையால் அவர் கட்சி தொடங்கவில்லை" என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஹெச்.ராஜா

மதுரை வந்திருந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது,``சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு தி.மு.க தமிழகத்தில் குழப்பம் ஏற்ப்படுத்த நினைக்கிறது. வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரசாரம் செய்வதை தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க போன்ற தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா குறைக்கச் சொல்லி போராடிய விவசாயிகளைச் சுட்டுக்கொன்ற தி.மு.க-தான் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஜனவரி 31 வரை மட்டுமே ஆ.ராசாவால் பேச முடியும். 2 ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா நியாபகம் வைத்து கொள்ள வேண்டும். தி.மு.க கொள்ளை, கொலைகாரக் கூட்டம். 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளைக் காப்பற்றக் கொண்டுவரப்பட்டவை.

ஹெச்.ராஜா

தி.மு.க-வுக்கு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். 1996-ல் ரஜினிகாந்த் தி.மு.க-வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். `ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்று ரஜினி அப்போது கூறினார். அப்போதிருந்து ரஜினி ரசிகர்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்து வருகிறார்கள்

ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குத்தான் ஆபத்து. ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டே கட்சி தொடங்குவது குறித்து முடிவை அறிவித்திருந்தார்,

ஹெச்.ராஜா

ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்கக் கூடியவர். ரஜினிகாந்த்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, அமித் ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/h-raja-speaks-about-rajinis-new-political-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக