நாகை அருகே கனமழை காரணமாக பக்கத்து வீட்டு சுவர் இடிந்து, உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில், கணவர் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. பல கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகளும், லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடிப் பயிர்களும் தண்ணீரில் மிதக்கின்றன. வேதாரண்யம் தோப்புத்துறையில் அமைந்திருந்த பழைமைவாய்ந்த கோயில் கோபுரம் இடிந்து விழுந்துவிட்டது.
Also Read: நாகை: 5 கோயில் பிரசாதம்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின்!
இந்தநிலையில் நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் கனமழை காரணமாக பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். திருச்செங்காட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மாலா தம்பதியர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். திடீரென நேற்று நள்ளிரவில் பயங்கரச் சத்தத்துடன் அருகில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அந்தச் சுவர் உறங்கிக்கொண்டிருந்த பன்னீர்செல்வம் - மாலா மீது விழுந்தது. இதில், மாலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயமடைந்த பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மாலா உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/woman-dies-after-wall-collapses-following-heavy-rain-in-nagapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக