Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

விருதுநகர்: ராஜேந்திர பாலாஜிக்கெதிரான தி.மு.க போராட்டம்; முஷ்டி முறுக்கிய அ.தி.மு.க! போலீஸ் தடியடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். இதில், ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மைய தி.மு.க-வினர் எரிக்கும் சம்பவங்களால் விருதுநகர் மாவட்டம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உருவப்படம் எரிப்பு

எப்போதும் அதிரடியாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராஜேந்திரபாலாஜி, நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது தி.மு.க-வையும், மு.க ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதை அறிந்த திமுக நிர்வகிகள் இன்று காலை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் குவியத் தொடங்கினர். விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் தலைமையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகக் கோஷமிட்டபடி ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மைக்கு தீ வைக்க முயற்சித்தனர்.

உருவ பொம்மையை காவல்துறையினர் பறித்ததால், ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை தி.மு.க-வினர் கொளுத்தத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

உருவப்படம் எரிப்பு

இதைக் கேள்விப்பட்டு இப்பகுதியில் அ.தி.மு.க-வினரும் திரள ஆரம்பித்தனர், அவர்கள், தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டபடி மு.க.ஸ்டாலின் உருவபடத்தை எரிக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை எரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்தனர்.

Also Read: ``ஆறு அமைச்சர்களையும் நீக்குங்கள்!’’ - சீனியர்களை அதிரவைத்த ராஜேந்திர பாலாஜி!

தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்து மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி இரண்டு தரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். தி.மு.க-வினர் 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.

ராஜேந்திர பாலாஜி உருவப்படம் எரிப்பு

இதேபோல், அருப்புக்கோட்டை, ராஜபாளையத்திலும் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில், அத்தொகுதி தி.மு.க-வினர் ஈடுபட்டனர்.



source https://www.vikatan.com/news/politics/dmk-protest-against-rajendra-balaji-in-virudhunagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக