Ad

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

`ரஜினி கட்சி தொடங்கட்டும்... தலைமை அட்வைஸ்படி கருத்துச் சொல்வோம்!’ - பா.ஜ.க எல்.முருகன்

நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். முன்னதாக நாகர்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அம்பேத்கருடைய நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். ஏனென்றால் அம்பேத்கருடைய நினைவிடங்கள், அவர் பிறந்த இடம், அவர் வாழ்ந்த இடம், அவர் லண்டனில் படித்த இடம், இது எல்லாமே மறந்து இருந்தது. அதை எல்லாம் நினைவிடங்களாக மாற்றிய பெருமை பா.ஜ.க-வைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சேரும். அதுமட்டுமில்ல, டெல்லியில் 200 கோடி ரூபாய் செலவுல, ஒரே வருஷத்துல டாக்டர் அம்பேத்கர் பெயர்ல இண்டர்நேஷனல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அம்பேத்கர் பெயர்ல காயின் வெளியிடப்பட்டது. அவரது 125-வது பிறந்தநாள் ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பேரில பீம் ஆப் வெளியிட்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது பா.ஜ.க கூட்டணி ஆட்சியில்தான். அம்பேத்கர் புகழைப் பரப்பும் பணியை பா.ஜ.க எப்போதும் செய்துகொண்டிருக்கிறது. 1952-ல அம்பேத்கர் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பிய பெருமை பா.ஜ.க-வைச் சேரும்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த முருகன்

நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய வேல் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவுபெற இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனை தடங்கல்களையும் மீறி எங்களுடைய வேல் யாத்திரை நிறைவுபெறும். வேல் யாத்திரைக்கு மிகப்பெரிய அளவில மக்கள் மத்தியில வரவேற்பும், ஆதரவும் கிடைச்சிருக்கு. குறிப்பா முருக பக்தர்கள்கிட்ட மிகப்பெரிய ஆதரவு கிடைச்சிருக்கிறது. நாங்கள் சென்ற இடம் எல்லாம் மக்களுடைய பேராதரவு இருந்தது.

Also Read: ``சிங்களருக்கு எதிராக பா.ஜ.க 'வேல் யாத்திரை' போகலாம்’’- மன்சூர் அலிகான் ஐடியா!

புயல் காரணமா பல மாவட்டங்களில வேல் யாத்திரை நடத்த முடியாம நிறுத்திட்டு, சேவை காரியங்களில இறங்கிட்டோம். இருந்தாலும் எங்களுடைய பார்மாலிட்டிக்காக அதை நாளை நிறைவு செய்யுறோம். அண்ணன் ரஜினிகாந்த் ஒரு தேசிய பற்றாளர், ஒரு ஆன்மிகவாதி. அவர் கட்சி ஆரம்பிக்கிறதாச் சொல்லியிருக்கிறார்.

பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன்

அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், ஆரம்பிச்ச பிறகு எங்கள் தேசியத் தலைமையுடைய அட்வைஸ்படி எங்கள் கருத்தை தெரிவிப்போம்" என்றார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறதின் பின்னால் பா.ஜ.க இருப்பதாக சொல்லுறாங்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு ``வெயிட், வெயிட் பண்ணிப் பாருங்க" எனக் கூறிவிட்டுச் சென்றார் முருகன்.



source https://www.vikatan.com/news/politics/bjp-state-president-l-murugan-speaks-about-various-issues-in-nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக