Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

`8 வழிச் சாலைக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்!’ - மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

ரூபாய் 10,000 கோடி செலவில் சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியானதிலிருந்து விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த அரசாணையில் திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், இந்த திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் சாலை அமைப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அடுத்த எட்டு மாதங்களுக்குள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

டெல்லி உச்சநீதிமன்றம்

நிலத்தைக் கையகப்படுத்துவதில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவில்லை. எந்த ஒரு திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும் சுற்றுச்சூழல் அனுமதி மிகவும் அவசியம். நிலம் கையகப்படுத்துவதில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் போது கூறப்பட்டிருந்தது.

Also Read: `சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை, குழப்பமான திட்டமாக இருக்கிறது!' - உச்ச நீதிமன்றம்

அதேபோல, நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அந்த பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவில்லை. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் கருத்துகளைக் கூறப்பட்டிருந்தது.

எட்டு வழிச்சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் இரண்டு தரப்பிலும் கருத்துக்களைக் கேட்டறிந்தது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை செல்லும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில், இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/supreme-court-stay-order-to-salem-eight-lane-road-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக