Ad

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நிரவ் மோடியை விஞ்சிய செருகுரி ஸ்ரீதர்... ரூ.7,296 கோடி நிதி மோசடியின் பின்னணி என்ன? #CanaraBank

தொழிலதிபர்கள் வங்கிகளில் போலி ஆவணங்களைக் காட்டி கடன் வாங்குவதற்கு, பல வருடங்கள் கழித்து அதை ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பதும் அதற்கு முன்பாக அந்தத் தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டே வெளியேறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இப்படித்தான், மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி 7,000 கோடி ரூபாய்க்கு மேல் என மொத்தம் சுமார் 13,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஷயம் இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது.

நிரவ் மோடி

இதுவரை மோசடி என்றாலே, நிரவ் மோடியின் மோசடிதான் உதாரணமாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதை விடவும் அதிகமான நிதி மோசடியை ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான 'டிரான்ஸ்ட்ராய் இந்தியா' நிறுவனம் செய்திருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான செருகுரி ஸ்ரீதர், இணை இயக்குநர்கள் ராயபதி சாம்பசிவ ராவ் மற்றும் அக்கினேனி சதீஷ் ஆகியோரின் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வங்கிக் கூட்டமைப்பு கொடுத்த புகாரின் பேரில், கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் ஹைதராபாத் மற்றும் குண்டூரில் உள்ள அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது, கடன் மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

வங்கி மோசடி

இது குறித்து சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கவுர் பேசியபோது, "கனரா வங்கியிடமும் பிற வங்கிகளிடமும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து முறைகேடாக 7,926 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத், குண்டூர் உட்பட நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது மோசடிக்குத் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/business/banking/cbi-registers-case-in-transstroy-consortiums-rs-7926-crore-loan-fraud-in-canara-bank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக