Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

Doctor Vikatan: 15-18 வயதுப் பெண்கள் பீரியட்ஸ் நாள்களில் தடுப்பூசி போடலாமா?

15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வயதுப் பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில் தடுப்பூசி போடலாமா?

- மீரா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``பெரியவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே அட்வைஸ்தான் இந்த வயதுப் பெண்களுக்கும் பொருந்தும். பீரியட்ஸ் நாள்களிலும் இளம்பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி போடலாம். மாதவிலக்கு என்பது பெண்களின் வாழ்வில் 28 நாள்களுக்கொரு முறை நடக்கும் இயல்பான நிகழ்வு.

ரத்தப்போக்கின் காரணமாக அந்த நாள்களில் அவர்களுக்கு உடல் அசதியும் வயிற்றுவலியும் இருக்கலாம். அதைத் தாண்டி பீரியட்ஸ் நாள்களில் அவர்கள் பெரிய பிரச்னைகளை அனுபவிப்பதில்லை. இந்தப் பிரச்னைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

COVID-19 vaccine

Also Read: Doctor Vikatan: கொரோனா வராமல் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

பதின்பருவ பெண்களுக்கும் கோவிட் தடுப்பூசி அவசியம் செலுத்தப்பட வேண்டும். அவர்கள் மூலம் வீட்டிலுள்ள பிறருக்கு கோவிட் பரவாமலிருக்கவும் இது மிக முக்கியம். இப்போதைக்கு நம் நாட்டில் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்போது 15 முதல் 18 வயது பிள்ளைகளுக்கு கோவாக்சின் மட்டுமே போடப்படுகிறது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/can-15-to-18-years-old-women-take-covid-vaccines-during-periods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக