Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

`நிர்வாகக் காரணம்... திருச்சி சிறைக்குச் செல்ல வேண்டும்!’- ராஜேந்திர பாலாஜியை அலைக்கழிக்கிறதா அரசு?!

மதுரை மத்திய சிறைக்குக் கொண்டுவரபட்ட ராஜேந்திர பாலாஜியை நிர்வாகக் காரணம் என்ற பெயரில் திருச்சி சிறைக்குக் கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி

கடந்த 2016-21 ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித்தருவதாக 3.1 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவுசெய்தனர்.

இது மட்டுமல்லாமல் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புகார்கள் பதிவாகின. இந்நிலையில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியைத் தேடிவந்த தனிப்படையினர், கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அவரைக் கைதுசெய்தனர்.

ராஜேந்திர பாலாஜி

நேற்று மதியம் கைதுசெய்யப்பட்டவரை இன்று அதிகாலை ஸ்ரீவல்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்துவரப்பட்டார்.

Also Read: ராஜேந்திர பாலாஜி: `இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்?’; 15 நாள் நீதிமன்ற காவல்' -நீதிபதி உத்தரவு

இன்று காலை மதுரை சிறை வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்ட ராஜேந்திர பாலாஜியை சிறிது நேரத்தில் வெளியே அழைத்து வந்தனர். நிர்வாகக் காரணங்களால் திருச்சி மத்திய சிறைக்கு அவரைக் கொண்டு செல்ல அதிகாரிகள் பரிந்துரைத்ததாகச் சொல்லப்பட்டது.

போலீஸ் வாகனத்தில் ராஜேந்திர பாலாஜி

வாகனத்தில் ஏறிய ராஜேந்திர பாலாஜியின் முகம் இறுகிப்போயிருந்தது. கட்சித் தலைமையோ, கட்சியின் வழக்கறிஞர் அணியோ அவருக்கு எந்தவிதச் சட்ட உதவியும் செய்யவில்லை என்று வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாற்றி மாற்றி சிறைக்குக் கொண்டு செல்வதன் மூலம் அவரை அலைக்கழித்து மன உளைச்சலை உண்டாக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அவர் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajendra-balaji-moved-from-madurai-jail-to-trichy-central-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக