Ad

சனி, 25 செப்டம்பர், 2021

Tamil News Today: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குப் புதிய தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குப் புதிய தலைவர்

சுப்ரியா சாஹு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹுவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் அவருக்குக் கூடுதலாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamil-news-today-26-09-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக