Ad

சனி, 4 செப்டம்பர், 2021

பிரியாணிக்கு தொடைக்கறி, குழம்புக்கு நெஞ்சுக்கறி; என்ன சமையலுக்கு எந்தக் கறி வாங்கணும்?

எது எப்படியோ... ஞாயித்துக்கிழமையானா அரை கிலோ கறி எடுத்துச் சாப்பிட்டாதான் அந்த வாரமே முழுமையடைஞ்ச மாதிரி இருக்கும்ணு நினைக்கிற ஆளா நீங்க? அதே நினைப்போட கால் கடுக்கக் கறிக்கடையில நின்னு, வீட்டுக்கு வந்து சமைச்சு, ஆஹானு கறிசோறை வாயில எடுத்துப்போட்டா, கறியை மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம இருந்த அனுபவம் இருக்கா உங்களுக்கு? அப்போ உங்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்.

கறி குழம்பு

ஆட்டுக்கறி வாங்கும்போது பிரியாணி, குழம்பு, கிரேவினு என்னென்ன சமையலுக்கு எந்தெந்த பாகத்தைப் பார்த்து வாங்கணும், அதை எப்படி சமைக்கணும்னு தெரிஞ்சா, வேகப்பத்தலை, கறி ரொம்பக் கழண்டுடுச்சுனு எல்லாம் ஆகாம பக்குவமா சமையலாகும் பாத்தீங்களா... அதுக்காகத்தான் இந்தப் பொதுநல சேவை.

பின் தொடைக்கறி

கறி அப்டீனு சொன்னதும் நாலு தொடைக் கறிய எடுத்து ராஜ்கிரண் மாதிரி சாப்பிடணும்னு ஆசையா? அதுக்கு முன்னால, நீங்க என்ன டிஷ் செய்யப்போறீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி கறியோட பாகமும் மாறுபடும் என்பதை தெரிஞ்சுக்கோங்க.

Mutton

பிரியாணி, சுக்கா... இதுதான் உங்க மெனுனா கண்ண மூடிக்கிட்டு தாராளமா தொடைக்கறிய வாங்கலாம். தொடைக்கறி கொஞ்சம் கடினத்தன்மையோட இருப்பதனால பிரியாணி, சுக்கா மாதிரி அதிக வேக்காடு கொடுக்கக் கூடிய உணவு வகைகளுக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும்.

கழுத்துக்கறி, நெஞ்சுக்கறி

கறிக்குழம்பு, வறுவல், கோலா உருண்டைனு முடிவு பண்ணிட்டீங்கன்னா, கழுத்துக்கறி, நெஞ்சுக்கறியக் கேட்டு வாங்குங்க. பின்தொடைக்கறி மாதிரி சிவப்பு நிறமாவோ, கெட்டித்தன்மையுடனோ இல்லாம இருக்குறதால இதெல்லாம் சீக்கிரமா வெந்துடும்.

இன்னொரு பக்கம், கழுத்துக் கறியும் நெஞ்சுக் கறியும் கெட்டித்தன்மை குறைவா இருக்குறதால, பார்க்க சவ்வு மாதிரியோ, கொழுப்பு மாதிரியோ ஒரு தோற்றத்தைக் கொடுக்கலாம். இதனாலேயே பலருக்கும் கழுத்துக்கறி, நெஞ்சுக்கறி மேல ஈர்ப்பில்லாம போகலாம். ஆனா, மெதுவான இறைச்சியை விரும்புறவங்களோட முதல் சாய்ஸ், கழுத்து மற்றும் நெஞ்சுக்கறிதான்.

முன்தொடைக்கறி

எல்லா விதமான டிஷ்ஷுக்கும் பொருந்தக்கூடிய பகுதி, முன்தொடைக்கறிதான். குழம்பு, வறுவல், சுக்கா , பிரியாணி, கோலா உருண்டைனு எல்லா வெரைட்டிக்கும் முன்தொடைக்கறி சிறப்பானது.

Mutton Fry

இடுப்புக்கறி

இடுப்புக்கறி, கிட்னி பகுதி உள்ள கறி ரொம்ப மிருதுவா இருக்கும். மிருதுவான பகுதியை பின்தொடைக்கறியோட சேர்த்துச் சமைக்கும்போது, வேக்காடு தன்மை மாறிடலாம். மிருதுவான பகுதி சீக்கிரம் வெந்துடும், கெட்டியான பகுதி தாமதமாக வேகலாம். அதை தவிர்க்க, மிருதுவான பகுதியை கொஞ்சம் பெரிய துண்டுகளாவும், தொடைக்கறி பகுதியை அதை விட சின்ன துண்டுகளாவும் நறுக்கிக்கிட்டா, வேக்காட்டை பேலன்ஸ் செஞ்சுடலாம்.

இப்படி டிஷ்ஷுக்கு ஏத்த மாதிரி கறியைத் தேர்ந்தெடுத்துக்கிட்டா, `ஆஹா என்ன பதம், என்ன பக்குவம்...'னு ருசிச்சுக்கிட்டே எக்ஸ்ட்ரா ரெண்டு கை சாப்பாடு உள்ள இறங்கும்!



source https://www.vikatan.com/food/food/a-guide-to-buy-a-right-mutton-pieces-which-suitable-for-our-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக