Ad

சனி, 4 செப்டம்பர், 2021

எஸ்.பி வேலுமணி வீட்டில், ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாவி! - வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணியின் சென்னை, கோவை, வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர்,

எஸ்.பி. வேலுமணி வீடு

Also Read: வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!

கே.சி.பி இன்ஜினியர்ஸ் சந்திபிரகாஷ் என்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தினர். கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி லாக்கர் சாவி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக் குழு, எஸ்.பி வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், அவரின் லாக்கரை திறந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகளிடம், “கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது?” உள்ளிட்ட விபரங்களை விசாரித்துள்ளனர்.

வங்கி லாக்கர்

மேலும், வேலுமணி வங்கி கணக்கு குறித்த ஆவணங்களை பெற்று சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், லாக்கரில் இருந்து ஏதேனும் ஆவணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Also Read: ஆட்சியில் இருந்தால்தான் கோவை மக்கள்மீது அக்கறையா மிஸ்டர் வேலுமணி?

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “வேலுமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாவியின் அடிப்படையில் லாக்கரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகார் மற்றும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சொத்து விபரங்களை கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன” என்றனர்.

கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்

இதனிடையே, கோவை தி.மு.க பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் வேலுமணி மீது வைத்துள்ள புகார் தொடர்பாக, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 150 பக்க ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/dvac-officials-search-in-velumani-bank-locker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக