Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று, செய்தியானது. பழிக்குப்பழி கொலை, கஞ்சா விற்பதில் மோதல் என பல்வேறு காரணங்களுக்கு தொடர் கொலை சம்பவங்களும் மோதல் சம்பவங்களும் அரங்கேறியது. இதனை தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் ரெளடிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

சைலேந்திர பாபு

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த செப். 23-ம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Stroming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின் படி கைதானார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ஈடுபடுகின்ற ரெளடிகளுக்கு எதிரான காவல் துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்டாலின்

இதனிடையே டி.ஜி.பி சைலேந்திர பாபுவை அழைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தென் மாவட்டங்கள் அதிக அளவில் பழிக்குப்பழி சம்பவங்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது. மதுரையிலும் ரெளடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.

Also Read: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் சைலேந்திர பாபு இன்று தென் மாவட்டங்களுக்கு விசிட் செய்கிறார். இன்று மதுரையில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் ரெளடிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/after-meeting-with-cm-stalin-dgp-travel-south-to-solve-the-law-and-order-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக