தமிழகத்தில் தற்போதுள்ள திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடியில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: லேசாக வீசிய காற்று; உடைந்து தொங்கிய பேருந்து நிலையக் கூரைகள்! - அதிர்ச்சியில் ராசிபுரம் மக்கள்
கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஷிடம் தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தானேஷ் (எ) முத்துக்குமாரும், கரூர் பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு செல்வராஜும் போட்டியிடுகின்றனர். நிச்சயமாக, இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம். கடந்த நான்கு மாத திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரிப்போம். மேலும், திமுக தேர்தலுக்கு முன்பு மக்களிடம் வழங்கிய, 52 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்கடன்களை எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்திருக்கிறோம். ஆனால், இந்த திமுக ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடியில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், `தாலிக்குத் தங்கம்’ திட்டத்தில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துபவர்களுக்கு, அந்தத் திட்டம் கிடையாது என்று தற்போதைய திமுக ஆளும் அரசு கடும் நிபந்தனைகளை விதித்திருக்கிறது. மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் தூர்வாரப்படுகிறது என்பதெல்லாம் பொய். கடந்த ஆண்டுகூட அந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டது. நகரின் மையப் பகுதியில் ஓடும் இரட்டை வாய்க்கால் கூவமாக மாறியதால், அவற்றைச் சுத்தம் செய்யும்விதமாக அதன் போக்கை மாற்றாமல் கான்கிரீட் சுவர் அமைத்து, அவற்றை மூடி, இரு பக்கங்களிலும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mrvijayabaskar-attacks-dmk-over-the-gold-loan-amount-discount
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக