Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

பிள்ளைகளோடு கொண்டாடுவோம் பிள்ளையாரை... விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசுப்போட்டி!

யானை முகமும் பானை வயிறுமாக அருளும் பிள்ளையார் பிள்ளைகளுக்கு மிகப் பிடித்த தெய்வம். ஆம்! அவர் குழந்தை தெய்வம் மட்டுமல்ல; குழந்தைகளுக்கான தெய்வமும்கூட. மண்ணோ, மாவோ, மஞ்சளோ எதில் பிடித்து வைத்தாலும் கம்பீரமாக அதில் எழுந்தருளும் எளிய தெய்வம் அவர். ஆக, பிள்ளைகள் மனமுவந்து பிறர் உதவியின்றி வழிபட ஏதுவான சாமி.

அவ்வகையில் வரும் விநாயகர் சதுர்த்தியில், சிறப்புப் பரிசுப் போட்டியுடன் நம் பிள்ளைகளோடு கொண்டாடப்போகிறோம் பிள்ளையாரை!

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

விநாயகர் சதுர்த்தி

உங்கள் பிள்ளைகளின் கலைத்திறனுக்கேற்ப இயற்கைப் பொருள்களைக் கொண்டு அற்புதச் சிலையாகவோ அல்லது அழகு ஓவியமாக பிள்ளையாரைச் செய்யுங்கள்; நீங்களும் உதவி செய்யலாம்.

பிள்ளைகளோடு நீங்கள் செய்த பிள்ளையாரைப் பீடத்தில் அமர்த்தி பூக்களால் அலங்கரித்து, அந்தப் பிள்ளையாருடனான உங்கள் பிள்ளைகளின் 'செல்ஃபி' புகைப்படம் ஒன்றையும் கீழ்க்காணும் இணைப்பில், (கேட்கப்பட்டிருக்கும்) உரிய விவரங்களோடு இணைத்துச் சமர்ப்பியுங்கள்.

படைப்புகளை அனுப்ப இங்கே க்ளிக் செய்யவும்.

இணைப்பின் மூலம் எங்களை வந்தடையும் பிள்ளையார் சிலைகள் மற்றும் ஓவியங்களில் சிறப்பான 11 படைப்புகள் தேர்வு செய்யப்படும். அவர்களுக்குச் சக்தி விகடனின் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

வெற்றியாளர்கள் மட்டுமன்றி, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளூம் அனைத்துப் பிள்ளைகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள், உரிய பிரார்த்தனை சங்கல்பத்துடன் புதுவை அருள்மிகு மணக்குள விநாயகர் சந்நிதியில் வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

விநாயகர்

போட்டியாளர்களில் பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னமும் நான்கு நாள்களே இருப்பதால், சதுர்த்தித் திருநாளைத் தாண்டியும் போட்டிக்கான நாள்கள் நீளும்.

அவ்வகையில், தங்களின் படைப்புகளை இணைப்பில் பதிவு செய்யவேண்டிய கடைசி தேதி 15.9.21.

5.10.21-ம் தேதிக்குள் வெற்றிப் பெற்றோருக்கு சிறப்புப் பரிசுகள் வந்து சேரும்.

படைப்புகளை அனுப்ப இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/sakthi-vikatan-conducts-vinayagar-chathurthi-special-contest-for-kids

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக