Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேலூர் சிறுமி! - போக்சோவில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருப்பத்தூர் அருகேயுள்ள புதுப்பாளையம் கொடுமாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் என்கிற தங்கராஜ். வயது 29. இவர், 2013-ல் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று சிறுமியை தங்கராஜ் மிரட்டியுள்ளார். அச்சமடைந்த சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து பெற்றோரிடம்கூட சொல்லாமல் மறைத்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்துள்ளார்.

சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தங்கராஜ்

இதுகுறித்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரளிக்கும்போது, சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ‘போக்சோ’ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் தங்கராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்வழக்கில் நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு வழங்கினார். தங்கராஜ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் தங்கராஜ் அடைக்கப்பட்டார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/in-vellore-child-abuse-case-men-who-arrested-in-pocso-got-life-imprisonment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக