Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

கோவை: 9-ம் வகுப்பு மாணவர்கள் மூவருக்கு கொரோனா உறுதி! - 3 நாள்களுக்குப் பள்ளியை மூட உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்தநிலையில், கடந்த 1-ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

மூன்றாம் அலை எச்சரிக்கை இருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் இருந்துவருகின்றன.

Also Read: திறந்து கிடக்கும் தமிழக - கேரள எல்லைகள்; பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்?!

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா பரிசோதனை

மொத்தம் 33 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மூன்று பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூன்று நாள்களுக்குப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மூன்று மாணவர்களும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை.

இ.எஸ்.ஐ மருத்துவமனை

இவர்களில் இருவரின் பெற்றோர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். மூன்று மாணவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/9-students-tested-positive-for-corona-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக