Ad

சனி, 25 செப்டம்பர், 2021

காரைக்காலில் சிலை திருட்டு; மன்னார்குடியில் இரும்புக்கடை முதலாளி; 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 14 ஆண்டுகளுக்கு முன்பு, காரைக்கால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்த நபர், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தநிலையில் மன்னார்குடியில் கைது செய்யப்பட்டார்.

Also Read: கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்

பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீமையங்காடு கண்ணி ஜடாயுபுரிஸ்வரர் கோயில் உள்ளது. அங்கிருந்த நடராஜர் மற்றும் அம்மன் திருவுருவ சிலைகள் 2007-ம் ஆண்டு கொள்ளை போனது. அது தொடர்பாக அப்போது விசாரணை மேற்கொண்ட காரைக்கால் காவல்துறையினர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இந்திரஜித் என்கிற இப்ராஹிம், நேரு, செல்வம் உள்ளிட்டவர்களுக்கு அந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த மூன்று பேரும் ஜாமீனில் வெளியில் வந்தார்கள். இவர்களில் செல்வம், நேரு ஆகியோர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜாகி வந்த நிலையில் இந்திரஜித் என்கிற இப்ராஹிம் மட்டும் தலைமறைவாகிவிட்டார். காரைக்கால் காவல்துறையினர், இப்ராஹிம்மை தொடர்ந்து தேடி வந்தனர்.

மன்னார்குடி

இதற்கிடையே 2015-ம் ஆண்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இப்ராஹிம், செல்வம், நேரு ஆகியோர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. செல்வம், நேரு ஆகியோர் மட்டும் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இப்ராஹிம் மட்டும் தலைமறைவாகவே இருந்து வந்தார். உடனடியாக இப்ராஹிமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. இதனால், காரைக்கால் சிறப்பு அதிரடிப் படை பிரிவு காவல்துறையினர், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். இப்ராஹிம் மன்னார்குடியில்தான் வசித்து வருகிறார் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காவல்துறையினர் தன்னைத் தேடி வருவதைப் பற்றி கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல், மன்னார்குடி பகுதியில் இவர் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இதனைக் கண்டுபிடித்த காரைக்கால் காவல்துறையினர் மன்னார்குடிக்கு விரைந்து வந்து இப்ராஹிமை கைது செய்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-the-man-who-absconded-from-them

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக