`நடப்பு கூட்டத்தொடரிலே நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு!’
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இன்றைய கூட்டத்தொடரில் கொடநாடு விவகாரத்தில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ``அவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஒன்றிய அரசு மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் விமர்சனம் செய்து சுட்டிக்காட்டுவோம்.
அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டுவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும். நீட் தேர்வால் பா.ஜ.க அதிமுக உறுப்பினர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
Also Read: கொடநாடு விவகாரம்: அதிமுக வெளிநடப்பு ;`மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!’ -ஸ்டாலின்
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலியே நீட் விலக்கு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-18-08-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக