இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,17,26,507 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 422. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,25,195-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,08,96,354 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,04,958 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 38,887 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 47,85,44,114 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 61,09,587 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது!
அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 9.10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலை 6 மணி அளவில் போர்ட்பிளேயரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது தொடர்பான தகவல்கல் இன்னும் வெளியாகவில்லை.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-03-08-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக