என் வயது 55. நான் துபாயில் இருக்கிறேன். பிப்ரவரி மாதம் sinopharm தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டேன். தற்போது ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி எனக்குத் தகவல் வந்துள்ளது. என்னுடன் பணிபுரியும் பலரும் ஃபைஸர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட நிலையில், மீண்டும் இன்னொரு தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்குமா? தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் கொலஸ்டரால், நீரிழிவுக்கான டெஸ்ட்டுகளை எடுக்க வேண்டுமா? கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
- மொஹிதீன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``புதிய வகை டெல்டா வேரியன்ட் வைரஸுக்கு எதிராகப் போராடுவதில் sinopharm தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருப்பது தெரிந்தே, துபாயில் ஃபைஸர் போன்ற mRNA வகை தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள்.
அதன்படி நீங்கள் மீண்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தவறில்லை. நீங்கள் எந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து முதலில் போட்டுக் கொண்டதற்கும் இப்போது போட்டுக்கொள்ள விருப்பதற்குமான இடைவெளி முடிவு செய்யப்படும். ஏற்கெனவே போட்டுக்கொண்ட அதே தடுப்பூசியைத்தான் மீண்டும் போட்டுக்கொள்ளப் போகிறவர்களுக்கு ஒரு டோஸ் போதுமானது.
Also Read: Covid Questions: கோவிட்டிலிருந்து மீண்டு 2 மாதங்கள்; இன்னும் முதுகுவலி குறையவில்லை; என்ன செய்வது?
புதிய தடுப்பூசி என்றால் மீண்டும் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ராலோ, ரத்தச் சர்க்கரையோ தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தடையாக இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்றவை உள்ளவர்களுக்கு தடுப்பூசிதான் தொற்றிலிருந்து காக்கும் ஆயுதமே."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/already-took-2-dose-sinopharm-vaccine-in-dubai-should-i-take-other-vaccine-again
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக