Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

Covid Questions: பிசிஓடி (PCOD) பாதிப்புள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

பிசிஓடி பிரச்னை இருக்கிறது... இந்நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பிசிஓடி பாதிப்புக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?

- சரிதா கலைமணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்கள் தாராளமாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொதுவாக பாலிசிஸ்டிக் ஓவேரியன் பிரச்னை உள்ள பல பெண்களும் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். உடல் பருமன் அதிகமுள்ள பெண்களுக்கு, வயதாக, ஆக இதயம் தொடர்பான பாதிப்புகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். இளம் வயதுப் பெண்கள் என்றால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். எனவே பிசிஓடி பாதிப்புள்ள பெண்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல் பருமன், அது ஏற்படுத்தும் இதய பாதிப்புகளின் காரணமாக, பிசிஓடி உள்ள ஒரு பெண்ணுக்கு கோவிட் தொற்று வந்தால், அதன் தீவிரம் மற்ற பெண்களைவிட இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

Also Read: Covid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா?

எனவே பிசிஓடி பாதிப்புள்ள பெண்கள் எல்லோரும், (குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் திட்டத்திலும் இருக்கும் பெண்கள் உட்பட ) தயங்காமல் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்வியிலிருந்து நீங்கள் பிசிஓடி பிரச்னைக்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகத் தெரிகிறது. அதாவது கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சையில் இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். அந்த நிலையிலும் நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

COVID-19 vaccine

Also Read: Best Exercise To Cure PCOS | Easy Home Workouts For Weight Loss | PCOD | Say Swag

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என நீங்கள் பயந்தால், கருத்தரித்து 12 வாரங்கள் கழித்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதாவது இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படும் 4-5-6வது மாதங்களில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் நமக்கிருக்கும் தகவல்களின் படி, கர்ப்பத்தின் எந்த ட்ரைமெஸ்ட்டரிலும் அதாவது கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் வரை எப்போது வேண்டுமானாலும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/health/healthy/can-women-who-suffer-from-pcod-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக