"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் மத்திய அரசு தடையாக உள்ளது" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
மதுரை வந்திருந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது தூக்குத் தண்டனையை ரத்து செய்து சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.
உடனே மாநில அரசு மூன்றே நாளில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநரோ அதை குப்பையில் போட்டார். தற்போது 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது" என்றவரிடம்,
``அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் விமர்சிக்கப்படுகிதே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"சமூக நீதியை பாதுக்காக்கத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அர்ச்சகர்களின் உரிமையை பறிப்பதற்காக அல்ல. இது இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய சமூகநீதி ஆகும்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``கொடநாடு கொலை குறித்து மறுவிசாரணை செய்யக்கூடாது என அதிமுகவினர் கூறுகின்றனரே” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''கொடநாடு கொலை சம்பவம் என்பது படுபயங்கர திட்டமிட்ட படுகொலையாகும். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கனகராஜ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கு எவ்வளவு பணம், நகைகள், ஆவணங்கள் இருந்தது பற்றி அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை கொள்ளை இரண்டும் அங்கு நடந்துள்ளது. அதனால், விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
source https://www.vikatan.com/government-and-politics/politics/vaiko-press-meet-at-madurai-regarding-7-persons-release
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக