Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

`களைகட்டாத சசிகலா பிறந்தநாள் முதல் பொன்னாரை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகிகள் வரை' கழுகார் அப்டேட்ஸ்

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சில அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய சசிகலா, "கொரோனா முடிவுக்கு வந்த பிறகு அனைவரையும் சந்திப்பேன்" என்று சொல்லியிருந்தார். ஆனால், கொரோனா பரவல் குறைந்த பிறகும் சசிகலா வெளியே தலைகாட்டவில்லை. ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலா பிறந்தநாள் வந்தது. ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்தநாளில் சமூக வலைத்தளங்களில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், கோயில்களில் சிறப்பு பூஜைகள், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அமர்களப்படுத்துவது வழக்கம்.

சசிகலா - டி.டி.வி தினகரன்

ஆனால், இம்முறை பெரியளவில் பிறந்தநாள் விழாவை யாரும் கொண்டாடவில்லை. குறிப்பாக, சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலேயே பிறந்தநாள் விழாக்கள் களைகட்டவில்லை. பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக தினகரனிடமிருந்து எந்த சிக்னலும் வராததால் அனைவரும் கப்சிப் ஆகிவிட்டார்களாம். அதனால், சசிகலா பிறந்தநாள் விழாவை வைத்து அரசியல் மாற்றம் வரும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்கிறார்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததற்காக சுதந்திர தினவிழாவின்போது மதுரையிலுள்ள சரவணா மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கினார். இது தி.மு.க-வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணனுக்குச் சொந்தமானது.

டாக்டர் சரவணன்

கடந்த தேர்தலின்போது தி.மு.க-வில் சீட் வழங்காததால், பா.ஜ.க-வில் சேர்ந்து மதுரை வடக்கு தொகுதியில் தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கு எதிராகப் போட்டியிட்டு டஃப் ஃபைட் கொடுத்தார். “கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவரின் மருத்துவமனைக்கு எப்படி விருது கொடுக்கலாம்?” என்று மதுரை உடன்பிறப்புகள் பொங்கினாலும், இன்னும் சில கட்சி நிர்வாகிகளோ, “டாக்டர் சரவணனை மீண்டும் தி.மு.க-வுக்கு இழுக்க சில தி.மு.க புள்ளிகள் போட்ட பிளான்தான் இது” என்று கண்சிமிட்டுகிறார்கள்!

சமீப நாட்களாக கன்னியாகுமரியில் நடக்கும் பா.ஜ.க நிகழ்ச்சிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைப் பார்க்க முடிவதில்லை. மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே சுமூக உறவு இல்லாததால், அவரை யாரும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லையாம். ஒருவேளை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டால், மாவட்ட நிர்வாகிகள் தலைகாட்டாமல் புறக்கணித்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

பொன்னார்

அப்படிதான் சமீபத்தில் வாஜ்பாய் நினைவு தினத்தில் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்த வந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அதில், மாவட்டத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. கேட்டால், அந்த நிகழ்ச்சி குறித்து அவர்களுக்குத் தகவல் இல்லை என்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை குமரி மாவட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லாமல் அணுவும் அசையாது என்கிற நிலை இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதால், “அரசியல்ல இதெல்லாம் சகஜம்” என்று கமென்ட் அடிக்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள்!

திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும் மாஜியுமான ஒருவரின் வலதுகரத்துக்கு சமீபத்தில் பகுதிச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் கவுன்சிலரான அவர், பல வில்லங்க விவகாரங்களில் சிக்கியவராம். கோயில் இடத்தை ஆக்கிரமித்து இவர் கட்டியிருக்கும் பங்களா முன், எப்போதும் நான்கு சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

Also Read: துர்கா ரூட்டில் பதவி முதல் வேலுமணியைப் போட்டுக்கொடுத்த ட்ரீட்மென்ட் புள்ளி வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

கடந்த 10 ஆண்டுகளில் மாஜியின் பெயரைச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துவந்த இவர்மீது, கர்நாடக மாநிலத்தில் செக் மோசடி வழக்கு ஒன்றும் நடந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாஜியின் மூத்த வாரிசு விளையாடிய வில்லங்க வீடியோ ஒன்று இவரிடம் சிக்கியிருப்பதால், மாஜியும் இவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகிறார் என்கிறார்கள் திருவள்ளூர் கட்சி நிர்வாகிகள்!

கடலூரில் அ.தி.மு.க நகரச் செயலாளர் குமரன் உள்ளிட்ட இருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பது மாவட்ட அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பிருந்தே முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் குமரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்துவந்தது.

அமைச்சர் எம்.சி.சம்பத்

தேர்தல் நேரத்தில் குமரனை சமாதானப்படுத்த நினைத்த எம்.சி.சம்பத், அவரை அழைத்து அவருக்கு தனியாக இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களும், வாக்காளர்களுக்குக் கொடுக்க ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களும் கொடுத்தாராம். ஆனால், மொத்த ஸ்வீட் பாக்ஸ்களையும் குமரனே சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டாராம். அதில் கடுப்பான சம்பத் மேலிடத்தில் முறையிட்டிருக்கிறார். அதன் விளைவாகதான் குமரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய ராமேஸ்வரம் கோட்ட பா.ஜ.க ஐ.டி விங்கை பலப்படுத்தும் ஆன்லைன் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, “மூன்று மாவட்டங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 300 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்; அதிகம் கூட்டம் சேரக்கூடாது!” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடைசியில் அந்தக் கூட்டத்தில் வெறும் 13 பேர் மட்டும்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தாமரை

இதனால், கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாநில நிர்வாகி ஒருவர், ‘‘குறைந்தபட்சம் 50 பேர்கூட வரலை... இந்த லட்சணத்துல நாம எப்படி தாமரையை மலர வைக்க முடியும்?’’ என்று விளாசித் தள்ளிவிட்டாராம். அதற்கு அந்த 13 பேரில் சிலர், ‘‘கூட்டத்துல கலந்துக்காதவங்க மேலதானே அவர் கோபத்தைக் காட்டியிருக்கணும்’’ என்று முணுமுணுத்தபடியே ஆஃப்லைனுக்குச் சென்றுவிட்டார்களாம்!

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் நடிகை மீரா மிதுனை கைதுசெய்ய சில தினங்களுக்கு முன் கேரளாவுக்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் மீரா மீதுனை கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வருவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்களாம். வழியெல்லாம் “அய்யோ... அம்மா... என்னைக் கடத்துறாங்களே... அடிக்குறாங்களே” என்று கத்திக் கூப்பாடு போட்டு போலீஸாரை டார்ச்சர் செய்துவிட்டாராம். விசாரணையின்போதும், ‘‘கமிஷனரை வரச் சொல்லுங்க... நான் அவர்கிட்டதான் பேசுவேன்’’ என்று அலம்பல் செய்திருக்கிறார். ஒருவழியாக மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, “போலீஸ்காரங்க என்னை பட்டினி போட்டாங்க.

மீரா மிதுன்

கையை உடைச்சிட்டாங்க” என்று நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார். ‘‘சிக்கன் பிரியாணியை மூக்கு முட்ட சாப்டுட்டு இப்படி பொய் சொல்லுதே... கை வேற நல்லாதானே இருக்கு!” என்று புலம்பும் போலீஸார், “அடுத்தமுறை அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மனநல மருத்துவர் முன்னிலையில்தான் விசாரிக்க வேண்டும்’’ என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-sasikala-birthday-party-and-about-bjp-pon-radhakrishnan-current-political-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக