Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

''சிவசங்கர் பாபாவுக்கு செஞ்ச துரோகம்தான் கே.டி.ராகவனை முச்சந்தியில நிறுத்தியிருக்கு'' சண்முகராஜன்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் தொடர்பான பர்சனல் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக, அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டால் போக்ஸோ சட்டத்தில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் கே.டி.ராகவன் பெயர் அடிபட்டு வந்தது.

சிவசங்கர் பாவின் சீடரும் நடிகருமான சண்முகராஜனிடம் இதுகுறித்து பேசினேன்.

sivasankar baba

''சிவசங்கர் பாபா ஆசிரமத்துடன் எனக்கு சில வருஷப் பழக்கம்தான். ஆரம்பத்துல பெரியார், கம்யூனிசம்னு பயணிச்சிட்டிருந்த எனக்கு திடீர்னு சித்தர் வழிபாடு குறித்து ஆர்வம் வர, ஷீரடி போயிட்டு வந்தேன். அதோட தொடர்ச்சியா ஒருநாள் சிவசங்கர் பாபாவைச் சந்திக்க வாய்ப்பு வந்தது. அவருடைய பேச்சு, ஆற்றல் என்னைக் கவர அவரை குருவா, மகானா ஏத்துக்கிட்டேன். நான் மட்டுமல்ல என்னை மாதிரி ஆயிரக்கணக்கான சீடர்கள் ஆசிரமத்துடன் தொடர்புல இருக்கோம். அங்க இருக்கிற கோயில்கள்ல வழிபாடு பண்ணுவோம். சிலர் அங்கேயே தங்கியிருக்காங்க. ஆனா, ஆசிரம ட்ரஸ்ட்ல நான் எந்தப் பொறுப்புலயும் இல்லை. அவருக்கு சீடரா இருக்கறது மட்டுமே போதும்னு நினைக்கிறவன் நான்.

அவர் கைது மேட்டருக்கு வர்றேன். திடீர்னு பத்திரிக்கைகள்ல அவர் பள்ளிக்கூடம் பத்திச் செய்தி வர ஆசிரம நிர்வாகத்துல இருக்கிறவங்களைப் போய் கேட்டோம். நிர்வாகத்துல இருக்கிற ஜானகி சீனிவாசன், ‘அதெல்லாம் பயப்படற மாதிரி ஒண்ணும் நடக்காது. கே.டி.ராகவன் விஷயத்தை அமித்ஷா வரை கொண்டு போயிட்டார்’னு சொன்னாங்க. கே.டி.ராகவனுடைய மனைவி ஆசிரமத்துல நடனம் கத்துக்க வர, அதன் மூலமா கே.டி.ராகவனும் சிவசங்கர் பாபா ஆசிரமத்துடன் தொடர்புக்கு வந்தார்.

k.t.ragavan

அதனால கைதெல்லாம் நடக்காதுனு நாங்க நம்பினோம். ஆனா திடீர்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அப்பதான் எங்களுக்கு ஜானகி அண்ட் டீம் மேல கோபம் வந்தது. அதுக்குப் பிறகுமே அவங்க நடந்துக்குற விதம்தான் எங்களுக்குப் பல சந்தேகங்களை எழுப்புச்சு. கைதைத்தான் தடுக்க முடியலை. அவரை வெளியில எடுக்கவாச்சும் முயற்சிக்கலாமேனா அதுக்கு முயற்சி செய்ய மாட்டேங்கிறாங்க. சில பெரிய பெரிய அதிகாரிகள் கூட பாபாவுடைய சீடரா இருக்காங்க. அவங்ககிட்டயும் எதுவும் பேசல. நாங்கலாம் சேர்ந்து பெரிய வழக்கறிஞர்களைக் கூட்டி வரலாம்னா அதைத் தடுக்கிறாங்க.

இடையில பாபாவை மருத்துவ சிகிச்சைக்காக கூட்டி வந்தபோது நான் போய் பார்த்தேன். ’எனக்கு ஆசிரமும் ஒண்ணுதான்... ஜெயிலும் ஒண்ணுதான். இங்கயும் நிம்மதியாவே இருக்கேன்’னவர், எங்களைப் பொறுமையா இருக்கச் சொன்னார். அவர்கிட்ட எங்களைப் பத்தி என்ன சொன்னாங்களோ தெரியலை.

எங்களுக்கு என்ன சந்தேகம்னா, பாபா ஆசிரமத்துக்கு சொத்துக்கள் நிறைய இருக்கு. இந்த ஜானகி அண்ட் கே.டி.ராகவன் குரூப் அதையெல்லாம் அபகரிக்கத் திட்டமிடுறாங்களோன்னு நினைக்கத் தோணுது. இதுக்கிடையில பாபாவுக்கு ஆதரவாப் பேசற என்னை மாதிரி சீடர்களை ‘எதுவும் பேசக்கூடாது’னு மிரட்டல் வேற விடுக்கிறாங்க. இப்ப ராகவன் பத்தி வேற ஏதோ வீடியோ வெளிவந்திருக்கு. அதுக்குள்ள நான் போக விரும்பலை. ஆனா, பாபாவுக்கு செஞ்ச துரோகம்தான் அவரை முச்சந்தில நிக்கவெச்சிருக்குனு பாபாவுடைய உண்மையான சீடர்கள் நினைக்கிறாங்க.

நான் என்ன சொல்றேன்னா, அவர் நடத்தற பள்ளிக்கூடத்துல தவறுகள் நடந்திருந்தா அரசு முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும். அதேநேரம் பழைய மாணவிகள்னு சொல்லி பாபா மீது புகார் சொன்னாங்களே அந்தப் பின்னணியில கூட இந்த ஜானகி அண்ட் டீம் இருக்கலாமோங்கிறதும் எங்களுடைய இன்னொரு சந்தேகம்’’ என்கிறார் சண்முகராஜன்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-shanmugarajan-interview-regarding-k-t-ragavan-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக